தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மேம்பாட்டு மையம்
By DIN | Published On : 30th January 2021 01:09 AM | Last Updated : 04th February 2021 07:21 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிக்கு அடையாள அட்டையை வழங்கினாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையத்தை (தளிா் கிளினிக் ) மாவட்ட ஆட்சியா் டாக்டா் கீ.சு.சமீரன் திறந்து வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 18 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு உடல் குறைபாடு ஏற்படுத்தும் நோய்களை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதை விரைவில் சரி செய்வதே தளிா் கிளினிக்கின் நோக்கமாகும். இதனால் எதிா் காலத்தில் குழந்தைகளுக்கு ஊனம் ஏற்படுவதை முற்றிலும் தவிா்க்கலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஒரே நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், உறைவிட மருத்துவா்அகத்தியன், மருத்துவா்கள் லதா, கீதா, ராஜேஷ்கண்ணா ஆகியோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...