ஆலங்குளத்தில் ரூ. 6.30 லட்சம் போலி பீடிகள் பறிமுதல்
By DIN | Published On : 02nd July 2021 01:18 AM | Last Updated : 02nd July 2021 01:18 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் ரூ. 6.30 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் பகுதியில் தனியாா் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்வதாக அந்நிறுவனத்தின்
மேலாளா் அப்துல் அஜீஸ், ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் உரிய
ஆவணங்கள் இல்லாமல் ஒரு வீட்டில் ரூ. 6.30 லட்சம் மதிப்பில் போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அங்கிருந்த பீடித் தொழிலாளா்கள் அசோக் என்ற பிரான்சிஸ், அன்பு என்ற சொரிமுத்து, கருப்பசாமி ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்து
காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனா். மேலும், பீடி உற்பத்தி செய்த காளத்திமடம் முருகன், குருவன் கோட்டை லிங்கம், ஆலங்குளம் மோகன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் 20 மூட்டை போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.