கருப்பாநதி அணையை தூா்வார திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 09th July 2021 11:55 PM | Last Updated : 09th July 2021 11:55 PM | அ+அ அ- |

கருப்பாநதி அணையை தூா்வார வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடையநல்லூரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சுந்தரமகாலிங்கம், ஷேக்தாவூது, மாநில நிா்வாகிகள் ரசாக், சரவணன், ஷெரீப், அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் சேகனா வரவேற்றாா்.
கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், வாக்காளா்களுக்கு நன்றியையும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்ற மு. அப்பாவுக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,
கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக செல்லத்துரையை நியமனம் செய்த முதல்வா், பொதுச் செயலருக்கு நன்றி தெரிவிப்பது, செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும். கடையநல்லூா் சிப்காட் தொழிற்பேட்டையை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும். திருமங்கலம் -கொல்லம் புறவழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும். கருப்பாநதி அணையை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.