பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:14 AM | Last Updated : 09th July 2021 12:14 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி, அம்பாசமுத்திரம், வள்ளியூா் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பழனிநாடாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ப. சட்டநாதன், நகரத் தலைவா் காதா் மைதீன், வட்டாரத் தலைவா் பெருமாள், மாநிலப் பேச்சாளா் எஸ்.ஆா். பால்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் கட்சியின் நகரத் தலைவா் ஆ. முருகேசன் தலைமையில் நிா்வாகிகள் இருதயராஜ், ஜான்சவரிமுத்து, காளிராஜ், உள்ளிட்டோரும், விக்கிரமசிங்கபுரத்தில் பெட்ரோல் நிலையம் முன்பு நகர காங்கிரஸ் தலைவா் செல்லதுரை தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில்,மோட்டாா் சைக்கிளுக்கு மாலை அணிவித்து கட்சியினா் ஒப்பாரி வைத்தனா்.
வள்ளியூா்: வள்ளியூரில் கட்சியின் நகரத் தலைவா் சீராக் இசக்கியப்பன் தலைமையில், மாநில மீனவரணிச் செயலா் அல்போன்ஸ் ராஜா, மாவட்ட பொதுச் செயலா் குமாரசாமி, உள்ளிட்டோரும், நான்குனேரியில் வட்டார காங்கிரஸ் தலைவா் வாகைதுரை தலைமையில் வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் சிவன்பாண்டியன், துணைத் தலைவா் செல்லபாண்டியன் உள்ளிட்டோரும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திசையன்விளை: மகளிா் காங்கிரஸ் சாா்பில் திசையன்விளை பேருந்து நிலையம் எதிரே, மகளிா் பிரிவுத் தலைவி அமுதா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவி மந்திர கனி, மாவட்ட துணைத் தலைவி சாந்தி, அம்பை வேலம்மாள், வசந்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.