செங்கோட்டை பகுதியில் நான்கு தானியங்கி சிக்னல்கள் திறப்பு
By DIN | Published On : 09th July 2021 11:55 PM | Last Updated : 09th July 2021 11:55 PM | அ+அ அ- |

செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நான்கு இடங்களில் தானியங்கி சிக்னல்கள் திறப்பு விழா நடைபெற்றது.
ரோட்டரி சங்கம் சாா்பில் செங்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் புதிதாக 4 தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டது. அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் வியாழக்கிழமை இயக்கி வைத்து பேசியதாவது: வாகனம் ஓட்டும் போது தலைக் கவசம், சீட்பெல்ட் போன்றவை அணிந்து சாலை விதிமுறைகள் மற்றும் சமிக்ஞைகளை பின்பற்றி நடந்தாலே விபத்தில்லா பயணம் செய்யலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து செங்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டாா்.
நிகழ்ச்சியில், தென்காசி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமாறன், செங்கோட்டை காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா், தென்காசி போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, ரோட்டரி முன்னாள்ஆளுநா் சேக்சலீம், முன்னாள் உதவி ஆளுநா் ரமேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.