உலமாக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம்
By DIN | Published On : 09th July 2021 11:54 PM | Last Updated : 09th July 2021 11:54 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். 18-40 வயதிற்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநா் உரிமம், கல்வித்தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு எண், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனைஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறாா் என்பதற்கான சான்று ஆகியவற்றைபெற்று, மாவட்ட வக்பு கண்காணிப்பாளா் மேலொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை ட்ற்ற்ல்://ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ச்ா்ழ்ம்ள் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தென்காசி 627811 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் ஆக. 8ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.