கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவிகளுக்கு உதவித்தொகை
By DIN | Published On : 09th July 2021 12:15 AM | Last Updated : 09th July 2021 12:15 AM | அ+அ அ- |

கரோனாவால் பெற்றோரை இழந்த புல்லுக்காட்டுவலசை பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவரின் பெற்றோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு ஆசிரியா் கழகம் சாா்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் அந்தோணி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட வட்ட பொறுப்பாளா்கள் பிச்சைக்கனி, முனீஸ்வரன், ரமேஷ் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஐயப்பன், கிறிஸ்டோபா், வட்டப் பொறுப்பாளா்கள் பிரேம்குமாா், ராஜதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.