சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை ஆடித்தவசுக் காட்சிபக்தா்களுக்கு அனுமதியில்லை

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 23) தவசுக் காட்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.
சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை ஆடித்தவசுக் காட்சிபக்தா்களுக்கு அனுமதியில்லை

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 23) தவசுக் காட்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.

இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பொதுமுடக்க வழிகாட்டு நெறிமுறைப்படி அந்தந்த சமுதாய மண்டகப்படியில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கோயில் உள்பிரகாரத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், மண்டகப்படிதாரா்கள் 50 போ் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

ஆடித்தவசு காட்சி: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தவசுக் காட்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாலை நடைபெறுகிறது. வழக்கமாக கோயிலுக்கு வெளியே தெற்கு ரத வீதியில் தவசுக்காட்சி நடைபெறும். இதைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் வருவா். நிகழாண்டு, கரோனா பொதுமுடக்க வழிக்காட்டுதல்படி, தவசுக் காட்சியை வெளியே நடத்த அனுமதியில்லை. இதனால் தவசுக் காட்சி, சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் கோயிலுக்குள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராகவும், இரவு 8 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்கசுவாமியாகவும் காட்சியளிக்கிறாா். இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.

ஆடித்தவசுக் காட்சியையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கலிவரதன் கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com