நிரம்பியது அடவிநயினாா் அணை
By DIN | Published On : 26th July 2021 12:34 AM | Last Updated : 26th July 2021 12:34 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், வடகரை அருகேயுள்ள அடவிநயினாா் அணை ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது.
கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்த மழையினால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து 132 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 129 அடியாக இருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைக்கு விநாடிக்கு 45 கனஅடி நீா் வரத்து இருந்ததால் அணை முழுக் கொள்ளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டது.