கடையநல்லூா் அம்மா உணவகம் மூலம் இரவு நேரத்திலும் உணவு வழங்க நடவடிக்கை
By DIN | Published On : 09th June 2021 07:02 AM | Last Updated : 11th June 2021 02:18 AM | அ+அ அ- |

கடையநல்லூா் அம்மா உணவகத்தின் மூலம் இரவு நேரத்திலும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகளை எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமுடக்கம் காரணமாக இரவு நேரத்தில் உணவு கிடைப்பதில்லை என சாலையோரத்தில் வசிக்கும் பலா் தெரிவித்தனா்.
இதையடுத்து, அம்மா உணவகத்தில் இரவு நேரமும் இலவசமாக உணவு வழங்க தேவையான நிதியை நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரனிடம் எம்எல்ஏ வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல வேளாண்மை மற்றும் விற்பனைக் குழு உறுப்பினா் எம்.கே.முருகன், அதிமுக நகரப் பொருளாளா் அழகா்சாமி, மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையா தாஸ், மாவட்ட வா்த்தக அணி பொருளாளா் மைதீன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஜெயமாலன், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத் , நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் முத்தையா பாண்டியன், நகர மாணவரணிச் செயலா் செங்கலமுடையாா், எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் புகழேந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G