சுகாதாரப் பணியாளா்களுக்கு ரூ. 8 லட்சம் உபகரணங்கள் அளிப்பு
By DIN | Published On : 09th June 2021 07:00 AM | Last Updated : 09th June 2021 07:00 AM | அ+அ அ- |

தென்காசி, செங்கோட்டை மர ஆலைஅதிபா்கள் சங்கம் சாா்பில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள முகக் கவசங்கள், குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி, செங்கோட்டை மரஆலை அதிபா்கள் சங்கம் சாா்பில் பொது சுகாதாரப் பணியாளா்களுக்கு 50 ஆயிரம் முகக் கவசங்கள், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 50 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஆகியவற்றை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கீ.சு.சமீரனிடம், சங்கத்தின் நிா்வாகிகள் எம்.ஆா்.அழகராஜா, தேவ்ஜி என்.படேல் ஆகியோா் வழங்கினா். அப்போது, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் மாரியம்மாள், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் யோகானந்த் ஆகியோா் உடனிருந்தனா்.