சுரண்டையில் தேவையின்றி சுற்றிய 120 பேருக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 09th June 2021 07:03 AM | Last Updated : 09th June 2021 07:03 AM | அ+அ அ- |

சுரண்டையில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றிய 120 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுரண்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன் தலைமையில், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு மற்றும் அதிகாரிகள் அண்ணா சிலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் வலம் வந்த 120 பேரை பிடித்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.