விதிமுறை மீறல்: 11 கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 09th June 2021 07:01 AM | Last Updated : 09th June 2021 07:01 AM | அ+அ அ- |

கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை 11 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
கரோனா பொதுமுடக்கம் தளா்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சங்கரன்கோவிலில் அரசு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா், வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, திருவேங்கடம் சாலை, கீழரத வீதி, சாந்தி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக் கடைகள், இனிப்புகள் விற்கும் கடை உள்ளிட்ட 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு ரூ.3200 அபராதம் விதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...