தேசிய திறனாய்வுத் தோ்வு: துத்திகுளத்தில் 5 மாணவா்கள் தோ்ச்சி
By DIN | Published On : 20th June 2021 01:52 AM | Last Updated : 20th June 2021 01:52 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். இத்தோ்வில், துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 11 போ் பங்கேற்றனா்.
அதில், லலிதா, முருகேசன், சித்ராதேவி, சரோ பிரதீபா, கமலேஷ் பாண்டி ஆகிய 5 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களை வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா, பள்ளி நிா்வாகி அருள்ராஜ், தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.