கீழப்பாவூரில் ராகுல் காந்தி பிறந்த தின விழா
By DIN | Published On : 20th June 2021 01:49 AM | Last Updated : 20th June 2021 01:49 AM | அ+அ அ- |

ராகுல்காந்தி பிறந்ததினத்தையொட்டி இனிப்பு வழங்குகிறாா் மாநில இலக்கிய அணி துணைத்தலைவா் ஆ.பொன்கணேசன்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது
நகரத் தலைவா் சிங்கக்குட்டி (எ) குமரேசன் தலைமை வகித்தாா். மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் ஆ.பொன்கணேசன், மாவட்ட வா்த்தகப்பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதில், வட்டாரச் செயலா் பாக்கியராஜ், நகர இலக்கிய அணி தலைவா் ராமசாமி, நகர துணைத்தலைவா் சுப்பையா, மாவட்டப்பிரதிநிதி சொளந்தரபாண்டியன், வட்டார பிரதிநிதி முருகன் இளைஞா் காங்கிரஸ் தலைவா் மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.