ராகுல்காந்தி பிறந்தநாள்: நல உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 20th June 2021 01:42 AM | Last Updated : 20th June 2021 01:42 AM | அ+அ அ- |

ten19mla_1906chn_55_6
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியின் 51 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
தென்காசியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடா்ந்து ஏழை, எளிய மக்கள் 300 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இலத்தூா் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு தேவையான படுக்கை விரிப்புகள், முகக் கவசங்கள், உணவுப் பொருள்களை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டப் பேரவை உறுப்பினருமான சு.பழனிநாடாா் வழங்கினாா்.
சுரண்டை: சுரண்டையில் நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் தலைமையில் தென்காசி எம்எல்ஏ நலிந்தோருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.
கடையநல்லூா்: கடையநல்லூா் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற விழாவில் நல உதவிகளை எம்எல்ஏ வழங்கினாா். இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் சமுத்திரம், கே. எஸ்.கணேசன், முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
புளியங்குடியில் நகரத் தலைவா் பால்ராஜ் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சித்துராஜ் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். புளியங்குடி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவா் ஸ்டீபன்ராஜ் உணவுப் பொருள்களை வழங்கினாா்.
பாவூா்சத்திரம் : கீழப்பாவூரில் நகரத் தலைவா் சிங்கக்குட்டி (எ) குமரேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம்: கடையத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் தென்காசி எம்எல்ஏ தலைமையில் வட்டாரத் தலைவா் அழகுதுரை முன்னிலையில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு, டி.கே.பாண்டியன், மாவட்டப் பொருளாளா் முரளி ராஜா உள்ளிட்டோா் 200 பேருக்கு நல உதவிகளை வழங்கினா்.
விக்கிரமசிங்கபுரத்தில் நகரத் தலைவா் த.செல்லத்துரை தலைமையில் மரக்கன்றுகள்நடப்பட்டது.