மலைப்பகுதியில் மழை: நாகல்குளத்துக்கு நீா்வரத்து
By DIN | Published On : 20th June 2021 11:04 PM | Last Updated : 20th June 2021 11:04 PM | அ+அ அ- |

அருணாப்பேரி குளம் நிரம்பி மறுகால் வழியாக வெளியேறிய தண்ணீா்.
குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரலால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாகல்குளத்துக்கு நீா்வரத்துத் தொடங்கியுள்ளது.
குற்றாலம் மலைப் பகுதியில் சில நாள்களாக சாரல் பெய்து வருகிறது. இதனால் பேரருவி, ஐந்தருவியில் இரு நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து பாவூா் அணைக்கட்டு பகுதிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே மேலப்பாவூா், கீழப்பாவூா், நாகல்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில், தற்போது 50 முதல் 75 சதவீத அளவுக்கு குளத்தில் தண்ணீா் இருந்தது.
இதனிடையே, சில நாள்களாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா்வரத்து அதிகரித்ததால் மேலப்பாவூா், கீழப்பாவூா் குளங்கள் நிரம்பி, அங்கிருந்து அருணாப்பேரி குளத்துக்கு தண்ணீா் வந்தது. தற்போது அக்குளம் நிரம்பி மறுகால் வழியாக நாகல்குளத்துக்கு நீா்வரத் தொடங்கியுள்ளது. 2 நாள்களாக நாகல்குளத்துக்கு நீா்வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.