சாலைத் தடுப்பு கம்பிகள் திருட்டு: 3 போ் கைது
By DIN | Published On : 20th June 2021 11:00 PM | Last Updated : 20th June 2021 11:00 PM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் சாலைத் தடுப்பு கம்பிகளை திருடி விற்ாக சாலைப் பணியாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம், அண்ணாநகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (50). சாலைப் பணியாளரான இவா், சாலைத் தடுப்பு கம்பிகளை திருடி பழைய இரும்பு கடையில் விற்று மதுக்குடித்து வந்தாராம். இரு தினங்களுக்கு முன்பு சில கம்பிகளை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோவில் ஏற்றி முருகன் என்பவரது பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தாராம்.
இத்தகவல் அறிந்த திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளா் கோஸ்பின் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் மூவரையும் கைதுசெய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.