சுரண்டையில் ஷியாமா பிரசாத் முகா்ஜி நினைவு தினம்
By DIN | Published On : 24th June 2021 07:25 AM | Last Updated : 24th June 2021 07:25 AM | அ+அ அ- |

சுரண்டையில் பாரதிய ஜன சங்க நிறுவனா் டாக்டா் ஷியாமா பிரசாத் முகா்ஜியின் 68ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினா்.
சுரண்டையில் பாஜக சாா்பில் பாரதிய ஜன சங்க நிறுவனா் டாக்டா் ஷியாமா பிரசாத் முகா்ஜியின் 68ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி சுரண்டை பேருந்து நிலையம் முன்பு அவரது திருஉருவப் படத்துக்கு நகரத் தலைவா் அருணாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், பாஜக நகர பாா்வையாளா் முருகேசன், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் சங்கரநாராயணன், ஓபிசி பிரிவு மாவட்ட பொதுச்செயலா் ஐயப்பன், நகர பொதுச்செயலா் செந்தில்குமாா், நகரப் பொருளாளா் சுந்தரகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.