வீரகேரளம்புதூரில் தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க திமுக கோரிக்கை
By DIN | Published On : 24th June 2021 07:23 AM | Last Updated : 24th June 2021 07:23 AM | அ+அ அ- |

வீரகேரளம்புதூரில் தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.ஜேசுராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த கோரிக்கை மனு:
வீரகேரளம்புதூரில் 52 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்பட்டு வருகிறது. இதை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்திட வீரகேரளம்புதூரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையின் பயனாக கடந்த 16.12.2016 அன்று தமிழக அரசு வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கியது.
ஆனால் அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே, நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வீரகேரளம்புதூரில் தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.