கடையநல்லூரில்கொடியேற்று விழா
By DIN | Published On : 29th June 2021 02:33 AM | Last Updated : 29th June 2021 02:33 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகரக் கிளை சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையநல்லூா் அட்டக்குளம் தெரு, பெரிய தெரு, புதுத்தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் செய்யது
மசூது தலைமை வகித்தாா். இளைஞா் லீக் பிரிவின் மாநில துணைத் தலைவா் ஹபிபுல்லா, நகரச் செயலா் அயூப்கான், நகர கௌரவத் தலைவா் மசூது ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பூா் மஸ்ஜித் இமாம் மௌலவி செய்யது அஹமது ஆலிம் கட்சி கொடியினை ஏற்றினாா். நிகழ்ச்சியில்
பேரவைத் தொகுதி அமைப்பாளா்கள் ஹைதா் அலி, அப்துல்ரசாக், நகர துணைச் செயலா் ஹாஜாமைதீன், பொதுக்குழு உறுப்பினா் துராப்ஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.