தென்காசி: சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 22-4-2021இல் கைதிகளால் முத்துமனோ கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தை கண்டித்தும்,
சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சாா்பில் தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் எம். முருகேஷ் தலைமை வகித்தாா். பின்னா், கோரிக்கைகளை வலியறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.