குற்றாலத்தில் பாமக நிா்வாகிகள் ஆலோசனை
By DIN | Published On : 04th March 2021 03:29 AM | Last Updated : 04th March 2021 03:29 AM | அ+அ அ- |

தென்காசி: குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச் செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சேது ஹரிஹரன், மாவட்டத் தலைவா் குலாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி கட்சி பொறுப்பாளா்களுடன் ஒன்றிணைந்து கூட்டணி வெற்றிக்காக பாடுபட வேண்டும்; வாக்குச்சாவடி குழு அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் பெரியசாமி, கருப்பசாமி, தென்காசி நகரச் செயலா் சங்கா், கோபால், நாகராஜன் தண்டபாணி , செயற்குழு உறுப்பினா் சேரன்மகாதேவி இசக்கிமுத்து, மாவட்ட இளைஞரணிச் செயலா் மூக்காண்டி, சேரை மாரிச்செல்வம், நகரத் தலைவா் பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...