கீழப்பாவூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 12th March 2021 03:31 AM | Last Updated : 12th March 2021 03:31 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி, கீழப்பாவூரில் அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா். ந
ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, முன்னாள் மாவட்ட மகளிரணி தலைவா் விஜயராணி தலைமையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். அப்போது, தொகுதிக்கு சம்பந்தமில்லாத மனோஜ் பாண்டியனை மாற்றிவிட்டு, ஆலங்குளம் தொகுதிக்குள்பட்டவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினா்.