கடையத்தில் கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 15th March 2021 01:19 AM | Last Updated : 15th March 2021 01:19 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன், மாவட்ட இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அருணா ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில், கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை முதல் இலவச கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
60 வயதுக்கு மேற்பட்டோா், நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் 45 முதல் 59 வயதுடையோா் ஆதாா்அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் இவற்றில் ஏதேனும் ஓா் அடையாளச் சான்றுடன் காலை 9 முதல் மாலை 5 மணிக்குள் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாளிலிருந்து 28 நாள்கள் கழித்து 2ஆவது தவணை போட்டுக்கொள்ள வேண்டும் என, கடையம் வட்டார மருத்துவ அலுவலா் பழனி குமாா் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...