முக்கிய பிரமுகா்களிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்
By DIN | Published On : 15th March 2021 01:29 AM | Last Updated : 15th March 2021 01:29 AM | அ+அ அ- |

மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளா் பூங்கோதை.
ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் டாக்டா் பூங்கோதை ஆலடிஅருணா, கீழப்பாவூா் பகுதியில் முக்கிய பிரமுகா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
பாவூா்சத்திரத்தில் மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்ற அவா், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் மற்றும் கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டி, சாலைப்புதூா், சிவகாமிபுரம் பகுதிகளில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்.சிகளை சோ்ந்த முக்கிய பிரமுகா்கள், ஊா் பெரியா்வகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...