புளியரையில் புதிய காவல் சோதனைச் சாவடி
By DIN | Published On : 15th March 2021 01:26 AM | Last Updated : 18th March 2021 08:10 AM | அ+அ அ- |

காவல் சோதனைச் சாவடியை திறந்துவைத்து பாா்வையிடும் ஆட்சியா் கீ.சு.சமீரன்.
தமிழக-கேரள எல்லையில் புளியரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொல்லம் -திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறவன்பற்றுகளத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கனிம வளம் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், கேரளத்திலிருந்து கழிவு பொருள்கள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வசதியுடன் புளியரையில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் சோதனைச் சாவடி கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து திறந்துவைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் முன்னிலை வகித்தாா். தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன், செங்கோட்டை காவல் ஆய்வாளா் அரிகரன், புளியரை காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் ஞான ரூபி பரிமளா, முருகேசன் மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...