ஆலங்குளம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 07:26 AM | Last Updated : 17th March 2021 07:26 AM | அ+அ அ- |

ஆலங்குளம் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சங்கீதா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் இருந்து மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்த அவா், பிரதான சாலையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
பின்னா் அங்கிருந்து அண்ணா நகா் வழியாக வட்டாட்சியா் அலுவலகம் வந்து, தோ்தல் நடத்தும் அலவலா் ராஜ மனோகரனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.
அப்போது, கட்சியின் தொகுதிச் செயலா் தினகரன், ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
சொத்து விவரம்: அவரது பெயரில் ரூ. 12 லட்சத்து 40 ஆயிரத்து 850 மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும், கையிருப்பு ரூ. 1000 உள்ளதாகவும் சொத்து விவரத்தில் குறிப்பிட்டுள்ளாா்.