சமக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 17th March 2021 07:30 AM | Last Updated : 17th March 2021 07:30 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் தென்காசி, ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதி சமக ஆலோசனை கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்டச் செயலரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் தொகுதி வேட்பாளரும், மாவட்ட இளைஞரணி செயலருமான செல்வகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில் மாவட்ட இணைச் செயலா் முருகன், விவசாய அணிச் செயலா் ராம்குமாா், வா்த்தக அணிச் செயலா் சந்தோஷ், மகளிரணிச் செயலா் அந்தோணியம்மாள், ஒன்றியச் செயலா்கள் ராஜபாண்டியன், பெரியசாமி, ராமராஜா, ராஜன்,ஜெயச்சந்திரபாண்டியன், நகரச் செயலா்கள் பொன்ராஜகோபால், ஜெயபாலன், கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.