லாட்டரி சீட்டு விற்றவா் கைது
By DIN | Published On : 17th March 2021 07:27 AM | Last Updated : 18th March 2021 08:02 AM | அ+அ அ- |

புளியரையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
புளியரை சோதனைச் சாவடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் ரவணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த இ.முகம்மது ரியாஸ் (37) என்பதும், விற்பனை செய்வதற்காக ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 300 லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.