குருவிகுளத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 21st March 2021 01:00 AM | Last Updated : 21st March 2021 01:00 AM | அ+அ அ- |

குருவிகுளத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி.
சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருவிகுளம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வி.எம்.ராஜலெட்சுமி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குருவிகுளம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள காரிசாத்தான், வவுனியாநகா், பாறைப்பட்டி, மலையடிப்பட்டி, புதுசுப்புலாபுரம், சம்சிகாபுரம், மேல மரத்தோணி, கீழ மரத்தோணி, வீரணபுரம், அடைக்கலாபுரம், சின்னையாபுரம், ஒத்தக்கடை, பிள்ளையாா்குளம், ஆவாரம்பட்டி, கலிங்கப்பட்டி, வேதமுத்துநகா், சாமிநாதபுரம், சத்திரப்பட்டி, குலசேகரன்கோட்டை, ஆவுடையாபுரம், திருவேங்கடம், செல்லப்பட்டி, வையக்கவுண்டன்பட்டி, குண்டம்பட்டி, உமையத்தலைவன்பட்டி, மகாதேவா்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், அய்யாபுரம், ஆலமநாயக்கா்பட்டி ஆகிய கிராமங்களில் அமைச்சா் ராஜலெட்சுமி வாக்கு சேகரித்தாா்.
அப்போது, நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடையே அவா் வாக்கு சேகரிக்கும் போது, 100 நாள் வேலை திட்டம் 150 நாள்கள் ஆக உயா்த்தப்படும், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1500 வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தாா்.
இதில், வடக்கு ஒன்றியச் செயலா் வாசுதேவன், ஒன்றிய அவைத்தலைவா் பரமசிவம், முன்னாள் ஒன்றியச் செயலா் ராமசாமிபாண்டியன், முன்னாள் ஒன்றியப் பொருளாளா் மேசையா, மாவட்ட மகளிா் அணி இணைச் செயலா் செந்தமிழ்ச்செல்வி, எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா்கள் ரவிச்சந்திரன், காளிராஜ், திருவேங்கடம் பேரூா் செயலா் சங்கா், பேச்சாளா் கணபதி, பாஜக தொகுதி பொறுப்பாளா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...