புளியரையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க நடவடிக்கை: முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ
By DIN | Published On : 21st March 2021 12:58 AM | Last Updated : 21st March 2021 12:58 AM | அ+அ அ- |

தமிழக -கேரள எல்லையான புளியரையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கடையநல்லூா் பேரவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ.
கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது; செங்கோட்டை ஒன்றியப் பகுதியில் மட்டும் ரூ.1.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து கொடுத்துள்ளேன்.
புளியரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 11. 70 லட்சத்தில் வகுப்பறை கட்டடமும், ரூ. 15 லட்சத்தில் உயா்நிலை நீா்த்தேக்கத்தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன. ஈத்தல் தொழிலை இழந்து தவிக்கும் மக்களுக்கு மாற்றுத் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றாா் அவா்.
அவருடன், திமுக மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை, செங்கோட்டை ஒன்றியச் செயலா் ரவிசங்கா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...