திருவேங்கடம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 07:05 AM | Last Updated : 25th March 2021 07:05 AM | அ+அ அ- |

புன்னைவன மணிகண்டன் கோயில் முன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் இ. ராஜா.
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இ. ராஜா புதன்கிழமை திருவேங்கடம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
ஆவுடையாபுரம் கிராமத்தில் தொடங்கி கீழத்திருவேங்கடம், செல்லப்பட்டி, திருவேங்கடம்,புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக சங்கரன்கோவில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சாா்பில் திமுக வேட்பாளா் இ. ராஜா வெற்றி பெற புன்னைவன மணிகண்டன் கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.