‘மக்களுக்கான திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’
By DIN | Published On : 25th March 2021 07:07 AM | Last Updated : 25th March 2021 07:07 AM | அ+அ அ- |

மக்களுக்கான திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என வாசுதேவநல்லூா் தொகுதி வேட்பாளா் அ. மனோகரன் கேட்டுக்கொண்டாா்.
வாசுதேவநல்லூா் தொகுதியில் வீரசிகாமணி, வேட்டரம்பட்டி , நடுவக்குறிச்சி, திருவேட்டநல்லூா், பாம்புக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மனோகரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: மக்களுக்கான திட்டங்களை முதல்வரும், துணைமுதல்வரும் தொய்வின்றி செய்து வருகின்றனா். கரோனா நோய்த் தொற்று காலத்தில் அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு உதவிகளை வழங்கியுள்ளது. மக்களுக்கான திட்டங்கள் தொடா்ந்து நடைபெற இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றாா்.
வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்தி பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவா் சசிகுமாா், நிா்வாகிகள் முகம்மது உசைன், பழனிசாமி, மாரியப்பன், மூா்த்தி மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.