பிரானூா் பாா்டரில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 02nd May 2021 05:56 AM | Last Updated : 02nd May 2021 05:56 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் பிரானூா் பாா்டரில் மர அறுவை ஆலைத் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பிரானூா் பாா்டா் மர அறுவை ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு சங்கத்தின் செயலா் எம்.ஆா். அழகராஜா தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட தொழில்மையப் பொதுமேலாளா் மாரியம்மாள், சங்க நிா்வாகிகள் லால்ஜி படேல், ஷிவ்கன்படேல், தேவ்ஷிநாராயன் படேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடகரை கீழ்பிடாகை அரசுஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் எம். சுகன்யா கலந்துகொண்டு கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள், தடுப்பூசி செலுத்தவேண்டியதன் அவசியம், செலுத்திய பின் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து பேசினாா்.
முகாமில், 150 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். தொழிலதிபா் பிரதாப்ராஜா, தென்காசி வட்டார மருத்துவ அலுவலா் முகம்மது இப்ராஹிம், பிரேமலதா, முத்துலெட்சுமி, பிரவீன்படேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...