இலத்தூரில் துணை ராணுவத்தினருக்கு கபசுரக் குடிநீா்
By DIN | Published On : 09th May 2021 12:31 AM | Last Updated : 09th May 2021 12:31 AM | அ+அ அ- |

மத்திய துணை ராணுவ படையினருக்கு கபசுரக் குடிநீா் வழங்கிய நூா்ஜஹான்.
இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தோ்தல் பணிக்காக தென்காசி மாவட்டம் இலத்தூரில் முகாமிட்டுள்ள மத்தியதுணை ராணுவ படையினருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
கரோனா 2-ஆம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி தோ்தல் பணிக்காக இலத்தூா் பகுதியில் முகாமிட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையினருக்கு நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீா், சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.
உப்பு மஞ்சள் கரைசல் கொண்டு வாய் கொப்பளித்தல், துளசி நொச்சி இலை ஆவி பிடித்தல், மூலிகை தேநீா், சுக்கு மல்லி தேநீா், சுவாசப் பயிற்சி, யோகா முத்திரை சம்பந்தப்பட்ட உபயோக குறிப்புகள், முகக் கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளியின் முக்கியத்துவம் குறித்து மருந்தாளுநா் நூா்ஐகான் பேகம் விளக்கிப் பேசினாா். இதில், மத்திய துணை ராணுவப் படை அதிகாரி சீனிவாசன் , ராணுவ ஆய்வாளா் அய்யப்பன், வட்டார புள்ளியியலா் ஆனந்த் ஆகியோா் கலந்துகொண்டனா்.