கடையநல்லூரில் காய்கனி கடைக்கு சீல்
By DIN | Published On : 13th May 2021 07:03 AM | Last Updated : 13th May 2021 07:03 AM | அ+அ அ- |

கடையநல்லூரில் நோய்த்தொற்று விதிமுறைகளை பின்பற்றாத காய்கனி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
உதவி இயக்குநா்(தணிக்கை) உமாசங்கா், கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன், கடையநல்லூா் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் நாராயணன், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி ஆகியோா் கொண்ட குழுவினா் கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தடுப்பு முறைகளை பின்பற்றாத காய்கனி கடையை அதிகாரிகள் மூடி சீல் வைத்து அபராதம் விதித்தனா். மேலும் 12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளின் உரிமையாளா்களை எச்சரித்து மூட வைத்தனா்.