கடையநல்லூரில் டிரோன் மூலம் கண்காணிப்பு
By DIN | Published On : 13th May 2021 07:01 AM | Last Updated : 13th May 2021 07:01 AM | அ+அ அ- |

கடையநல்லூா் பகுதியில் பறக்கும் கேமரா மூலம் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடையநல்லூா் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பறக்கும்( டிரோன் ) கேமராவை பயன்படுத்தி போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கேமராவின் பதிவை கொண்டு கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு சென்ற போலீஸாா் கை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினா்.