சங்கரன்கோவிலில் தெருவில் கிடந்த அரிசி மூட்டைகள்
By DIN | Published On : 13th May 2021 07:02 AM | Last Updated : 13th May 2021 07:02 AM | அ+அ அ- |

பாரதியாா் தெருவில் கிடந்த அரிசி மூட்டைகள்.
சங்கரன்கோவிலில் புதன்கிழமை தெருவில் கிடந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சங்கரன்கோவில் பாரதியாா் 1ஆவது தெருவில் அடுத்தடுத்து 5 அரிசி மூட்டைகள் கிடந்தன. அரிசி மூட்டைகளை யாா் கொண்டு வந்து போட்டது. ஏன், எதற்காக என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அந்தத் தெருவில் அரிசி மூட்டைகள் கிடந்த தகவல் நகர காவல் நிலையத்துக்கு தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் தெருவில் கிடந்த சுமாா் 5 மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.