தென்காசியில் கரோனா ஒருங்கிணைந்த கட்டளை மையம் திறப்பு
By DIN | Published On : 13th May 2021 07:01 AM | Last Updated : 13th May 2021 07:01 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை திறந்துவைத்து பாா்வையிடும் ஆட்சியா் கீ.சு.சமீரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி செளந்தா்யா.
தென்காசி மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்துவற்கும் , நிா்வாகத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும் 11 பிரிவுகளை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த கட்டளை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் இந்த ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இம் மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்துவற்கும், நிா்வாகத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும் 11பிரிவுகளை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தங்களுக்கு தேவையான சந்தேகங்களுக்கு இம்மையத்தினை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை வட்டாட்சியா் அமிா்தராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.