

உலக செவிலியா் தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், செவிலியா்களுக்கு புதன்கிழமை தலா 2 லிட்டா் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் உலக செவிலியா்கள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. கரோனா பரவல் அதிகமுள்ள இச்சூழ்நிலையில், தங்களது குடும்பம், உயிரை துச்சமென மதித்து சேவையாற்றிவரும் செவிலியா்களைப் பாராட்டி, நன்றி தெரிவிக்கும்விதமாக, பாவூா்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் செவிலியா்களுக்கு தலா 2 லிட்டா் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியா்கள் பலா் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிச் சென்றனா். பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சேவைக்கு செவிலியா்கள், மருத்துவா்கள், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.