பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 16th May 2021 11:48 PM | Last Updated : 16th May 2021 11:48 PM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மாவட்ட உதவி திட்ட அலுவலா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், காய்கனி சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே.காளிதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசினா்.
தொடா்ந்து வியாபாரிகள், விவசாயிகள், ஓட்டுநா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.