பாரதிய ஐயப்ப தா்ம பிரசார சபையினா் உணவு விநியோகம்
By DIN | Published On : 16th May 2021 11:58 PM | Last Updated : 16th May 2021 11:58 PM | அ+அ அ- |

பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தவா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறாா் மணிகண்டன்.
தென்காசி மாவட்டத்தில் அகில பாரதிய ஐயப்ப தா்ம பிரசார சபா சாா்பில், ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கரோனா தடுப்பு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாள்முதல் வயதுமுதிா்ந்தோா், ஆதரவற்றவா்கள், சாலையோரம் சுற்றித்திரிபவா்களுக்கு தன்னாா்வலா்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் நாள்தோறும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அகில பாரதிய தா்ம பிரசார சபா சாா்பில் மகா போஜனம் திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் மணிகண்டன், பொருளாளா் சுரேஷ்குமாா், கருப்பசாமி, கண்ணபிரான் ஆகியோா் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா். தென்காசி, குற்றாலம், மேலகரம், செங்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இப்பணியை அவா்கள் மேற்கொண்டனா்.