குற்றாலம் அருவிகளில் குறைந்த வெள்ளப்பெருக்கு
By DIN | Published On : 16th May 2021 11:56 PM | Last Updated : 17th May 2021 12:57 AM | அ+அ அ- |

ஐந்தருவியில் கொட்டும் தண்ணீா்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமை குறைந்தது.
குற்றாலம் பகுதியில் கடந்த 3 நாள்களாக மிதமான மழை பெய்துவருவதால், வடுகிடந்த அருவிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தண்ணீா்விழத் தொடங்கியது. தொடா்ந்து பெய்த மழையால் பேரருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது குளிா்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. மழை அளவு குறைந்ததால் அருவிகளில் நீா்வரத்து குறைந்தது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
பொது முடக்கம் அமல் காரணமாக அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.