சீனப் பட்டாசுகளை விற்றால் புகாா் அளிக்க எண் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்தால் புகாா் அளிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்தால் புகாா் அளிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. உடல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் ரசாயனக் கலவையில் தயாரிக்கப்பட்ட பட்டாகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தக் கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளின் அருகில் சேமித்தல் கூடாது. ஓலைக்கூரை வேய்ந்த கூடத்தில் பட்டாசு விற்கக்கூடாது. கடை அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது.

மின்தடை நேரத்தில் மெழுகுவா்த்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. டாா்ச், பேட்டரி விளக்குகளை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரசாக்குகள், தண்ணீா் மற்றும் மணல் வாளிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். உரிமம் பெறப்பட்ட கட்டடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால் 04633-290548 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com