ஆலங்குளத்தில் காா் - பைக் மோதல்: இளைஞா் பலி
By DIN | Published On : 13th November 2021 12:52 AM | Last Updated : 13th November 2021 12:52 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு காா் - பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூா் சா்ச் தெருவைச் சோ்ந்த ஹரிராம் சேட் மகன் மதன்(23). ஆலங்குளத்தில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை நடைபெற்ற இவரது சகோதரி திருமணத்துக்கு வந்த நண்பா் ஒருவரை, ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு விட்டுவிட்டு தனது பைக்கில் தெற்கு கரும்பனூா் திரும்பியுள்ளாா். அப்போது தென்காசியிலிருந்து செய்துங்கநல்லூா் சென்ற காா், பைக் மீது மோதியதில் மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் செய்துங்கநல்லூா் சரவணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.