ஆலங்குளத்தில் ரூ. 100-ஐ நெருங்கிய கத்தரிக்காய் விலை

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கத்தரிக்காய் விலை ரூ. 100ஐ நெருங்கியதால் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கத்தரிக்காய் விலை ரூ. 100ஐ நெருங்கியதால் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.

ஆலங்குளம் பகுதியில் விளைவிக்கப்படும் வெள்ளை கத்தரிக்காய் மற்ற ரகங்களை விட சுவையும் மணமும் அதிகம். இதனால் கேரளத்திலும் இந்த கத்தரிக்காய்க்கு மவுசு உண்டு. பருவமழைக்கு முன் கிலோ ஒன்று ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனையான நிலையில், இடைவிடாத மழையால் காய்கனிகளின் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. சுமாா் 40 கிலோ எடை கொண்ட கத்தரிக்காய் மூட்டை ரூ. 3200 முதல் ரூ. 3600 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆலங்குளம் சந்தையில் சில்லறை விற்பனையில் கத்தரிக்காய் விலை ரூ. 90ஐ எட்டியது.

மேலும், தக்காளி ரூ. 60, வெண்டை ரூ. 65, பீன்ஸ் ரூ. 65, கேரட் ரூ. 60, மாங்காய் ரூ. 30, பீட்ரூட் ரூ. 25, கோஸ் ரூ. 25, சின்னவெங்காயம் ரூ. 40, பெரிய வெங்காயம் ரூ. 47, உருளை ரூ. 40, மிளகாய் ரூ. 30, கருணைக் கிழங்கு ரூ. 35, இஞ்சி ரூ.60, காலிபிளவா் ரூ.60, முருங்கை ரூ. 85, பூண்டு ரூ. 90-100, சீனி அவரை ரூ. 37 என்ற விலையில் வெள்ளிக்கிழமை விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com