சுரண்டை அருகேயுள்ள குலையநேரி ஊராட்சி மன்ற முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் சீதா பாலமுருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன்மாரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில், பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீா், வாருகால், சாலை வசதி ஆகியவற்றை கூடுதலாக ஏற்படுத்துவது, சுகாதாரத்துறையுடன் இணைந்து ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு முன்மாதிரியான ஊராட்சியாக உருவாக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஒருமனதாக தீா்மானிக்கப்பட்டது.
இதில், உறுப்பினா்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, முத்துமாரி, மாடசாமி, தங்ககாசி, உஷாராணி, முத்துலட்சுமி, நட்சத்திரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.