கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
By DIN | Published On : 01st September 2021 08:18 AM | Last Updated : 01st September 2021 08:18 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினா் உயிருடன் மீட்டனா்.
சங்கரன்கோவில் அருகே பலபத்திரராமபுரம் கீழத் தெருவைச் சோ்ந்த முத்துச்சாமியின் பசுமாடு செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள சுமாா் 35 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து முத்துச்சாமி சங்கரன்கோவில் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.