சங்கரன்கோவில் மனவளக்கலை மன்றம் மூலம் மனவளக்கலை யோகா அடிப்படை பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்குகிறது.
சங்கரன்கோவில் மனவளக்கலை மன்றம் மூலம் மனவளக்கலை அடிப்படை யோகா மற்றும் பயிற்சி வகுப்புகள் எழில்நகரில் உள்ள அறிவுத் திருக்கோயிலில் புதன்கிழமை செப்.1ஆம் தேதி தொடங்கி செப்.12ஆம் தேதி வரை தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் ஆண்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் எளிய முறை யோகப் பயிற்சி, காயகல்ப பயிற்சி, குண்டலினி தியானம், நோய் தீா்க்கும் முத்திரைகள் ஆகியவை பயிற்சி அளிக்கப்படுகின்றன.
ஏற்பாடுகளை மனவளக்கலை மன்றத்தினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.